இந்திய ஹாக்கியின் 100 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் விழா டெல்லியில் உள்ள தேசிய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்திய ஹாக்கியின் நூற்றாண்டு கால மகத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் ஹாக்கி விளையாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி விளையாடிப் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
















