தன்னுடைய இயக்கத்தில் தயாராகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாவதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்குத் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன், நான்காண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்குக் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அர்ஜுன், தான் தயாரித்து இயக்கும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
















