மாலியில் அல்-கொய்தா ஆதரவு குழுவால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குழுவால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அமைதியின்மை அதிகரித்து வருகிறது.
இதனால் மாலியில் அண்மைக் காலமாக ராணுவ ஆட்சி மற்றும் உள்நாட்டுப் பூசல்களால் அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாலியில் 5 இந்தியர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத குழுவால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மாலியில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















