ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அருகே ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
கே.வி.புரம் ஒன்றியம் களத்தூர் மற்றும் பழம் பாளையம் பகுதியில் உள்ள ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
காலை நேரத்தில் ஏரி உடைபட்டதால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் மொட்டை மாடிகளிலும், மேடான பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து தங்களது உயிரை காத்துக் கொண்டனர்.
விவசாயிகளின் டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான ஆடுகள், மாடுகள் உயிரிழந்தன.
தகவலறிந்து சென்ற வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கிராமத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















