தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோயில் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடற்கரையில் இரவு நேரத்தில் தங்கும் பக்தர்களின் உடமைகள் திருடு போவதாக தொடர் புகார் எழுந்தது.
இதனையடுத்து பக்தர்களின் நலன் கருதி, இரவு நேரத்தில் கடற்கரையில் தங்க இனி அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் கோயில் வளாகங்கள், மண்டபங்களில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றிரவு கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
















