உத்தரபிரதேசத்தில் அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் அலிகார் – ஆக்ரா நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சமமாய் கிராமம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்த 21 பேர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
















