ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீசாரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகளிர் உலகக் கோப்பை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் முக்கிய காரணமாக, இடது கைச்சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாரணியை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீசாரணி விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தபோது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















