இலங்கையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியில் இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்மநபர் திடீரென இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















