வங்கதேச மாணவர்கள் போராட்டத்தின்போது, இந்தியாவில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. நாடு முழுதும் அரங்கேறிய வன்முறையில், 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அங்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
இந்நிலையில் வங்கதேச மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, புத்தகம் வெளியாகியுள்ளது. அதில், தன் உயிரே போனாலும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என, ஷேக் ஹசீனா அடம்பிடித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நன்கு அறிமுகமான இந்திய அதிகாரியிடம் இருந்து வந்த அழைப்பையடுத்தே நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















