கன்னியாகுமரி வழியாகக் கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள், எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் தமிழக ஆம்னி பேருந்துகளுக்குப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கேரளா சென்ற ஆம்னி பேருந்துகள், இரு மாநில எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
















