இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாய்ஸ் பேஸ்டு எனப்படும் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனை சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
என்.பி.எஸ்.டி., எனும் இந்நிறுவனம், மிஸ்கால்பே எனும் டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்தச் சேவையை வழங்க உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சேவையைப் பயன்படுத்த இணையவசதி கூட அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















