தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி – 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடம்பெற்றுள்ளன.
இதில் கடந்த 2023-ல் ஆப்ரிக்க யூனியனும் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பரில் இருந்து ஓராண்டுக்கு அதன் தலைமை பொறுப்பு தென்னாப்ரிக்கா வசமானது.
நடப்பாண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப்பின் குற்றச்சாட்டை, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















