சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற பாஜக கலை, கலாசார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாஜக கலை, கலாசார அணி மாநில தலைவர் ஃபெப்சி சிவா, பாஜகவை சேர்ந்த கஸ்தூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைப்பது, மத்திய அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















