அரசுமுறை பயணமாக ஆப்ரிக்காவின் அங்கோலா நாட்டிற்கு சென்றடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 நாட்கள் அரசுமுறை பயணமாக அங்கோலா, போட்ஸ்வானா அகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், அங்கோலா நாட்டின் தலைநகரான லுவாண்டாவிற்குச் சென்றடைந்தார்.
அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து வரும் 11-ம் தேதி போட்ஸ்வானா நாட்டிற்கு செல்லும் திரௌபதி முர்மு, இருநாட்டு பயணங்களை முடித்துத்கொண்டு வரும் 13-ம் தேதி நாடு திரும்பவுள்ளார். இந்திய தலைவர் ஒருவர் இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
















