பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் 11ம் தேதி பூட்டான் நாட்டிற்கு செல்ல உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பூட்டான் மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நவம்பர் 11ம் தேதி அந்நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி பூட்டான் மன்னரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது இருதரப்பு உயர்மட்ட பரிமாற்றங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 12ம் தேதி வரை பூட்டானில் இருக்கும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பார் எனவும் இரு நாடுகளும் இணைந்து தயாரித்த மின் உற்பத்தி மற்றும் நீர்மின் திட்டங்களை தொடங்கி வைப்பார் எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
















