சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீதி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, மக்களுக்கு நீதி கிடைப்பதை எளிதாக்கும் வண்ணம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏழைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
















