பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீசும் இந்தியா- இஸ்ரேல் திட்டத்தை இந்திரா காந்தி அங்கீகரிக்கவில்லை என முன்னாள் சிஐஏ அதிகாரி ரிச்சர்ட் பார்லோ தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் சிஐஏ அதிகாரி ரிச்சர்ட் பார்லோ பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 1980 காலகட்டத்தில் பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்தியா, இஸ்ரேல் திட்டமிட்டதாக தெரிவித்தார்.
திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து விட்டதாக கூறிய அவர், ஒப்புதல் அளித்திருந்தால் பல பிரச்னைகள் தீர்ந்திருக்கும் என கூறினார்.
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்திரா காந்தி அங்கீகரிக்காதது வெட்கப்பட வேண்டிய ஒன்று எனவும் ரிச்சர்ட் பார்லோ விமர்சித்தார்.
















