தமிழக மின்வாரியத்தின் 3 நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை, பகிர்மான கழகம் மட்டுமே செய்வதால், நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தின்கீழ் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொரடமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டன. இதில், மின் வினியோகம் உள்ளிட்ட பணிகளை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டது.
மின் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டண வசூல், அரசு மானியம் ஆகியவை வாயிலாக வருவாய் கிடைப்பதாகவும், வரவை விட செலவு அதிகம் இருந்ததால் ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் மூன்று நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நிர்வாக செலவுகள் அனைத்தையும், பகிர்மான கழகமே செய்வதாகவும், இதனால் அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடி குறையாமல், தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















