கேரளா மாநிலம் மலப்புறத்தில் மதுபோதையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் மடக்கி பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இடறிகோடு தேசிய நெடுஞ்சாலையில் தலைக்கவசம் அணியாத இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் படுத்தவாறும், பக்கவாட்டில் நின்றவாறும் சாகசத்தில் ஈடுபட்டார்.
இதனால் அச்சமடைந்த சக வாகன ஓட்டிகள், கக்காடு என்ற இடத்தில் அவரை மடக்கி பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் திரூரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பதும், அவர் மது போதையில் சாகசத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவிடுத்தனர்.
















