கொடைக்கானல் ஏரிச் சாலையில் தனியார் அமைப்பு சார்பாகச் சகோதரத்துவத்தை மையமாக வைத்துச் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு பகுதியில் ஆரம்பித்த சைக்கிள் பேரணி, ஏரியைச் சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்தது.
சகோதரத்துவ ஒற்றுமையை முன்னெடுக்கவும், போதையில்லா உடல் வலிமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்தப் பேரணி, மதுரையைச் சேர்ந்த தனியார் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நடைபயிற்சி சென்ற சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















