பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவில் பாஜக வளர்ச்சிக்குக் குறிப்பிடத் தக்க பங்களிப்பை வழங்கியவர் எல்.கே.அத்வானி.
இதனாலேயே பிரதமர் மோடிக்கு அவர்மீது எப்போதுமே தனி மரியாதை உண்டு. உள்துறை அமைச்சர், துணை பிரதமர் எனத் தேசத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றிய எல்.கே.அத்வானி, நேற்று 98வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்ற பிரதமர் மோடி, அவருக்குப் பூங்கொத்து கொடுத்துத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் புகைப்படத்தைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
















