தாங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவர்கள் அல்ல என்றும், அரசியலமைப்பிற்குள்தான் தாங்கள் இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இதுகுறித்து பேசியவர்
ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம் எனவே, அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்றும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தடையை ரத்து செய்து ஆர்எஸ்எஸ்-ஐ சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றினர் என்றும் நாங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவர்கள் அல்ல, என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியலமைப்பிற்குள் தான் இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
















