அசாம் மாநிலம், குவாஹாத்தியில் 93வது விமானப்படை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
கடந்த அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாகக் குவாஹாத்தியில் இந்திய ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபட்டன.
வானில் சாகசங்களில் ஈடுபட்ட விமானங்களை மக்கள் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி அதன் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
















