லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
டி-20 போட்டியாக நடக்கும் இத்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐசிசி உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு கண்டத்திலும் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி ஒலிம்பிக் தொடரில் தகுதி பெறும் அணிகளாக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆசியா கண்டத்தில் இந்திய அணியும், ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்ரிக்கா கண்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியும் தகுதி பெறுகின்றன.
















