இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் நம் தலைமுறைகளும் இந்துவாகவே வாழ முடியும் எனப் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
‘ஹிந்துஸ் இன் ஹிந்து ராஷ்டிரா’ என்ற ஆங்கில நுாலை, மொழிபெயர்ப்பாளர் பத்மன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவானது, கோவை மாவட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் நூலை வெளியிடஅதனைப் பாஜகக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராம சீனிவாசன், இந்தியாவில் இருந்த 540க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒரே ஆண்டில் இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல்எனத் தெரிவித்தார்.
தேசம், தெய்வம், தர்மம் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்த சக்திதான் இந்தியாஎனக் குறிப்பிட்டட அவர், இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான், நம் தலைமுறைகளும் இந்துவாகவே வாழ முடியும் எனத் தெரிவித்தார்.
















