நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக கட்சிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இரு தொகுதிகளையும் பெற அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
பாஜக மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வன், பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் அசோக் ஆகியோர் வழங்கிய மனுவைப் பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
















