டொனால்டு ட்ரம்ப்பின் உரையை திரித்து வெளியிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், பிபிசியின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அமெரிக்க தலைமையகத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உரையாற்றிய அதிபர் ட்ரம்பின் பேச்சை திரித்து வெளியிட்டதாக, புகழ்பெற்ற ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி மீது புகார் எழுந்தது.
ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விதமாகப் பிபிசி நடந்துகொண்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், புகாரைத் தொடர்ந்து பிபிசியின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி, தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
















