ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை தூக்கி எறிந்த ரயில்வே ஊழியரின் வீடியோ வைரலான நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 4-ம் தேதி கான்பூரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயில் பெட்டியொன்றுக்கு வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர், குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால், அவர் குப்பைகளை உடன் எடுத்துச் செல்லாமல், ஓடும் ரயிலில் இருந்து அவற்றை கீழே வீசினார். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து குப்பையைத் தூக்கி எறிந்த ஒப்பந்த ஊழியரை பணிநீக்கம் செய்து வடமேற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகத்தின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
















