முறையான அனுமதிபெற்ற பின்னரும் ஆர்எஸ்எஸ் பாதயாத்திரைக்கு தடைவிதித்த கர்நாடக காங்கிரஸ் அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற தொழுகையை எப்படி அனுமதித்தது எனப் பாஜகவினர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் ஹஜ் செல்லும் பயணிகளில் சிலர் தொழுகை செய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முறையான முன் அனுமதி பெற்ற பிறகும் ஆர் எஸ் எஸ் பாதயாத்திரைக்கு தடைவிதித்த கர்நாடக அரசு, தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையத்தில் தொழுகை செய்வதை கண்மூடி பார்த்துக் கொண்டிருப்பதாக அம்மாநிலத்தின் பாஜக செய்தி தொடர்பாளர் விஜய் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
















