பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதமாக உயர்த்தினார். இதேபோல, பரஸ்பர வரி என்ற பெயரில் பல நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப், அதிகமாக வரி விதித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வரிவிதிப்புக்கு எதிராகப் பேசுபவர்கள் முட்டாள்கள் எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா இருப்பதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா ஈட்டி வருவதாகக் கூறியுள்ளார்.
பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், இது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
















