என்சிஇஆர்டி கல்வி திட்டத்தில், ஏழாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில், பழங்கால இந்திய கணித முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, அவ்வப்போது பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டுக்கான, ஏழாம் வகுப்பு கணிதப் பாடத்தின் இரண்டாம் பருவத்துக்கான புத்தகத்தில், இயற்கணிதம் என்ற அல்ஜிப்ரா பகுதி, இந்தியர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் பழமையான சமஸ்கிருத நுால்களில் இருந்து, வடிவியல் சார்ந்த உதாரணங்களும் விளக்கப்பட்டுள்ளன. 12ம் நுாற்றாண்டின் கணித மேதை பாஸ்கராச்சார்யாவின் பிஜகணித உரையும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.
















