பாஜக முயற்சித்தால், பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை, ஹிந்து விரோத திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிய முடியும் எனப் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் விளவங்கோடு பூத் பொறுப்பாளர்கள் மாநாடு, மேல்புறம் அருகே ஹிரண்ய மங்கலத்தில் நடைபெற்றது.
பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் RT சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மழையையும் பொருட்படுத்தாமல் பாஜக மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய கேசவ விநாயகம், பல்வேறு மாநிலங்களில் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாஜக ஆட்சி அமைத்துள்ளது எனக் கூறினார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டுமென்றால், ஒவ்வொரு பூத்களையும் வெற்றி பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
















