உத்தரபிரதேசத்தில் கஞ்சா கடத்தல்காரர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளாக மூட்டை மூட்டையாகச் சுமார் 3 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
உத்தரபிரதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான பிரதாப்கரில் கஞ்சா கடத்தல் வியாபாரி ராஜேஷ் மிஸ்ராவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து பிளாஸ்டிக் பைகள், சாக்குகள் ஆகியவற்றில் 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பைக் கண்டறிய சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் பல மணி நேரமாகப் போராடி ரூபாய் நோட்டுகளை தரம்பிரித்து எண்ணினர்.
இதனால் பெண் மற்றும் ஆண் போலீசார் பலரும் சோர்வடைந்தனர். இறுதியில் 3 கோடி ரூபாய் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தததை தொடர்ந்து அவற்றை மூட்டை மூட்டையாகக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து ராஜேஷ் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 6 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















