கடந்த 68 வருடங்களில் எனது சகோதரர் சபேஷிடம் ஒருமணி நேரம் மட்டும்தான் பேசியிருப்பேன் என இசையமைப்பாளர் தேவா உருக்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டடத்தில் மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பேரரசு, ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சபேஷின் சகோதரரும், இசையமைப்பாளருமான தேவா, சபேஷின் மறைவு மிகுந்த மனவலியை தருகிறது எனவும் என்னுடைய இரண்டு இறக்கைகளில் ஓர் இறக்கையை இழந்துவிட்டேன் என்றும் வேதனையுடன் கூறினார்.
















