திருச்சி மாநகரில் உள்ள காவலர் குடியிருப்பு உள்ளே புகுந்த கும்பல் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பீமா நகர் மாசிங்பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் விரட்டியுள்ளனர்..
அப்போது, உயிர் தப்பிக்க காவலர் குடியிருப்பில் நுழைந்துள்ளார். இருப்பினும், தாமரைச்செல்வனை விரட்டிச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
















