குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் வைர வியாபாரி ஒருவர் 21 ஆயிரம் மாணவிகளுக்கு 15 கோடியே 75 லட்சம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்கி உள்ளார்.
சூரத்தை சேர்ந்த பியூஷ் தேசாய் என்ற வைர வியாபாரி பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 21 ஆயிரம் மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கி உள்ளார்.
இத்திட்டத்திற்கு மறைந்த பிரதமர் மோடியின் தாயார் நினைவாக ஹிராபா நோ காம்கர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த 21 ஆயிரம் மாணவிகளுக்குத் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 15 கோடியே 75 லட்சம் ரூபாயை மாணவிகளுக்குக் கல்வி உதவி தொகையாக வழங்கியுள்ள வைர வியாபாரி பியூஷ் தேசாய், சிறுமிகளின் கல்விக்கு ஆதரவளிப்பதன் மூலம், தேசத்தை வளர்க்கும் பிரதமரின் பார்வைக்கு இத்திட்டம் வலுசேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
















