பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சனோர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஹர்மித் சிங் பதன்மஜ்ரா.
இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், மற்றொரு பெண்ணைப் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் புகாரளித்த நிலையில், ஹர்மித் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பஞ்சாபி இணைய டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ஜாமின் பெற்ற பின் பஞ்சாபிற்கு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
















