பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் 2 கட்டடங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் எனப் புதிய கட்சியை தொடங்கி மஹுவா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பிரதாப், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் எதிரிகள் யார் என்பதை கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சகோதரர் தேஜஸ்விக்கு, தேஜ் பிரதாப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
















