தென்கொரியாவில் விரைவான உடல் எடை குறைப்பை மேற்கொண்ட பாப் பாடகி இசை நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தென்கொரியாவின் பிரபல கே-பாப் பாடகியும், கவர்ச்சி நடிகையுடான ஹியூனா தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுபாட்டின் மூலம் ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை விரைவாகக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்காவ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹியூனா மேடையில் பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விரைவான உடல் எடை குறைப்பால் உடல் சோர்வு மற்றும் சத்துக்குறைபாடால் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் தற்பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரியப் பொழுதுபோக்குத் துறையில் நட்சத்திரங்கள் உடல் தோற்றம் மற்றும் அழகிற்காக மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளால் ஏற்படும் ஆரோக்கியச் சிக்கல்கள்குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் கிளப்பியுள்ளது.
















