இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ரஷ்ய எண்ணெய் காரணமாக இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டதாகவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளதாகவும் கூறினார்.
இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடந்து வருவதாகவும் தெரிவித்த அவர், வரி குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
















