டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் தமிழகம் – கேரளம்- கர்நாடக எல்லையோரத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் சோதனைச்சாவடிகளில் விடிய, விடிய வாகன தணிக்கை நடைபெற்றது. மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார், தனித்தனி குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
இதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனமும் முழு சோதனைக்கு பிறகே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. திருமலையில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களிலும் போலீசார் சோதனை செய்தனர்.
















