டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தின் போது கார் அருகே நின்று கொண்டிருந்த 4 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் வெடித்தது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கார் வெடித்தபோது மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் காண்போரை அச்சமடைய செய்துள்ளன.
















