சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடைபெற்றது.
இதில், மாவட்ட பாஜக சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வல்லபாய் படேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தேனி நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம், பழைய பேருந்து நிலையம் வழியாக பங்களாமேடு பகுதியை வந்தடைந்தது.
















