ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகச் செர்ஜியோ கோர் பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்தக் காத்திருக்கிறேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
















