காவலர்களுடன் அமர்ந்து நடிகர் ஷாருக்கான் எடுத்த புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில், மும்பை காவல்துறை அதிகாரிகள் மற்றும் இளம் காவல் அதிகாரியுடன் ஷாருக்கான் அமர்ந்துள்ளார்.
அப்போது பெண் அதிகாரியின் கையைப் பிடித்துக் கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்.
இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் சௌகரியமாக உணர வைக்கும் அளவுக்கு ஷாருக்கான் இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















