டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தது மருத்துவர் உமர் நபி என்றும், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் அவர் மூளையாகச் செயல்பட்டார் எனவும் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மருத்துவர் உமர் நபி ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார் என்றும், ஹரியானாவில் வெடிபொருட்களுடன் கைதான மருத்துவர் ஷக்கீரின் கூட்டாளி எனவும் கூறியுள்ளனர்.
மேலும், மருத்துவர் உமர் நபியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் தாய், சகோதரர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
















