ஆந்திர மாநிலம் கோனசீமாவில் கல்லூரி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் 50 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோனசீமா மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேரை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கல்லூரி பேருந்தை 60 வயதான தொண்டகுரா நாராயண ராஜு இயக்கி வந்தார். கொத்தபேட்டா பகுதிக்குப் பேருந்து வந்தபோது ஓட்டுநர் நாராயண ராஜுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் உயிரைக் காப்பற்றும் பொருட்டு அவர் பாதுகாப்பாகப் பேருந்தைச் சாலையோரத்தில் நிறுத்தியபின் மாரடைப்பால் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் நாராயண ராஜுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மாரடைப்புக்கு மத்தியில் 50 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பின் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















