டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணமாகப் பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்புத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாடு துணை நிற்கும் என்று தெரிவித்த பிரதமர், தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் கூறினார்.
















