குஜராத்தில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படும் ரிசின் என்ற கெமிக்கல் சயனைடை விட மிகக்கொடிய விஷத்தன்மை கொண்டதாகும்.
இதில் தண்ணீரை சேர்த்து டெல்லி, அகமதாபாத்தில் உள்ள கோயில் பிரசாதங்களில் கலக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டனர்.
சீனாவில் டாக்டர் பட்டம் பெற்ற அகமது முகைதீன் சையது உதவியுடன் இதனைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் தான் குஜராத்தில் 3 தீவிரவாதிகளையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 லிட்டர் ரிசின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மிகப்பெரிய ரசாயன தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
















