தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மதுரை சிறுவாலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
சிறுவாலையில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நிலையில் இருந்த நெல் மூட்டைகளை அண்மையில் தமிழ் ஜனம் செய்தி படம்பிடித்து காட்டியது.
இதனைத் தொடர்ந்து உண்மையை அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளின் அவல நிலையைப் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்தார்.
















